மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த விவகாரம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத்தடை உத்தரவைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு வீடு, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பின்பு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 8 தினங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை இடத்தை கையகப்படுத்த கூடாது என மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலக் தடை அறிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 633 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ள நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் 150 க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் 189 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
அதற்கான நிதி வழங்கப்பட்ட நிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் நிலத்திற்கான இழப்பீடு 2009 ஆம் ஆண்டு கணக்கெட்டின் படி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 16 ஆண்டுகள் கழித்து தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போதைய மதிப்பின்படி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் மேலும் 2013 சட்டத்தின்படி வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் மற்றும் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நிலத்தை கையபடுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000க்கும் மேற்பட்ட போலீசார் உடன் அதிகாரிகள் சின்ன உடைப்பு கிராமத்திற்கு வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது
இதனால் தங்களுக்கு உரிய வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு இடத்தை கையகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் நடத்திய பேச்சு வார்த்தையில் தங்களுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க .சனிக்கிழமை வரை கால அவகாசம் கேட்ட நிலையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் எனக் கூறி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நிலையில் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்தும் பயனாளிகளுக்கு மாற்று இடம் வழங்கும்வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால்பட்டாசு வெடித்து கொண்டாடினர் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் தங்களுக்கான உரிய நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து இதற்கான முயற்சியை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.




