• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி

ByJeisriRam

Nov 16, 2024

வேப்பம்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும் நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் கல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும் நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேப்பம்பட்டி கரட்டு பகுதியில் கல்குவாரி அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கல்குவாரி அமைந்தால் தினந்தோறும் வெடி வெடிப்பதத்துடன் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விவசாயம் அழியும் அபாய சூழ்நிலை நிலவும் என்பதால் விவசாயிகள் கல்குவாரி அமைக்க கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், விவசாய நிலங்களில் பாதை அமைப்ப எதிர்ப்பு தெரிவித்து அகழிகள் அமைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கல்குவாரிக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் கரட்டுக்குளம் கண்மாயை கரையை அழித்தும் கரட்டுக்குளம் கண்மாய்க்கு வரக்கூடிய நீர் வழித்தட ஓடையில் பாதை அமைத்து கல்குவாரிக்கு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவருடன் புகார் தெரிவித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த நிலையில் வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கரட்டுக்குளம் கண்மாய் கரையை அழித்தும் நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.