உசிலம்பட்டி அருகே எழுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு “கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதுகலை வேதியியல் ஆசிரியர் செல்வ மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் மாணவர்களோடு கல்வி பற்றி கலந்துரையாடினார். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கல்வியை எவ்வாறு கற்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். மேலும் கல்வி ஒரு மனிதனை எவ்வாறு செம்மைப்படுத்துகிறது என்றும் அதன் மூலம் நாடு எவ்வாறு முன்னேறும் என்பதை விளக்கிக் கூறினார். இதில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை அவரிடம் கேள்விகளாகக் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமிய கலைகள் புலத்தலைவர் பேராசிரியர் முத்தையா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இதில் பள்ளியில் நடந்த முடிந்த காலாண்டுத் தேர்வில் 6 முதல் 12 ம் வகுப்புகளில் முதல் மூன்று தரங்கள் எடுத்த மாணவர்களுக்கு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்., இந்தப் பரிசுகளை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பள்ளிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சிவகுரு சேகர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி மீராதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கோபி, முதுகலை வரலாறு ஆசிரியர் செந்தில்குமார், உதவித் தலைமையாசிரியர்கள் குணசுந்தரி மற்றும் செல்வம் வாழ்த்துரை வழங்கினார்கள்.பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ராஜா நன்றி உரை வழங்கினார். ஆசிரியர்கள் அனுதேவி மற்றும் பரமேஸ்வரி விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை உதவித் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஒருங்கிணைத்தார்கள்.
இந்த நிகழ்வில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து மாணவர்களுக்கு மதிய உணவு அளித்தனர்.