• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

2026 தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணியா..? ஈபிஎஸ் விளக்கம்

Byவிஷா

Nov 14, 2024

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்கப்படுமா என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது..,
“கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அத்திகடவு – அவினாசி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு இப்போது திறந்து வைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எல்லாம் வேண்டுமென்ற ஆமை வேகத்தில் நடக்கின்றன. எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன.
அதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்க பணியும் கிடப்பில் இருக்கிறது. வெள்ளலூர் ரூ.168 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் 50மூ பணிகள் முடிந்த பிறகும் அதை கிடப்பில் போட்டுள்ளார்கள். பொய்யான நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது தி.மு.க.அரசு விழிபிதுங்கி நிற்கிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமையுமா? என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு,
தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. எனவே தேர்தல் நேரத்தில் தான் இது குறித்து சொல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.