ஊரகப் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.20ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அதாவது ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வுகளில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு நவம்பர் 12 முதல் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் றறற.னபந.வn.பழஎ.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 20 ஆகும். இந்த திட்டத்தில் மாவட்டம் தோறும் 100 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படும் நிலையில் அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் வரையில் ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
