• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்ற போராட்ட குழு

ByKalamegam Viswanathan

Nov 11, 2024

மதுரை பரவை அருகே பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் நடக்கின்ற நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேச்சுவார்த்தைக்கு போராட்ட குழு சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ஐந்தாவது நாட்களாக காலையிலிருந்து பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கன் (ST) பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு தொடர்ந்து 5வது நாளாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட கோட்டாட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலையில் பேச்சுவார்த்தை உடன் படாததால் போராட்ட குழு மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தது.

இந்நிலையில் தற்போது போராட்ட குழுவில் இருந்து 10 நபர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாக கூறி, மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா அவர்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த போராட்டக்குழு சென்றுள்ளனர்.