பள்ளிக்கூட பிள்ளைகள் விஷயத்தில் அரசாங்க அதிகாரிகள் விளையாடக்கூடாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை பேட்டி
மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இந்து காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியரை கண்டித்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நாயக்கர் சமுதாயத்தினருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லு ராஜு செய்தியாளர்களை சந்தித்தபோது
கடந்த மூன்று நாட்களாக எனது தொகுதிக்குட்பட்ட பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்தி மூலம் அறிந்து இங்கு வந்தேன்
இது குறித்து தற்போதைய மதுரை ஆர்டிஓ புதிய தகவல்களை சொல்லி சாதி சான்றிதழ் வழங்காமல் தடுப்பதாக சொல்கிறார்கள் பத்தாம் வகுப்பு மாணவிக்கு சான்றிதழ் கொடுத்தால் தான் மேற்படிப்புக்கு போக முடியும் அவருக்குரிய சலுகைகள் கிடைக்கும் சான்றிதழ் கேட்டு கணவருடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது மாணவியை தரக்குறைவாக பேசி உள்ளதாக தகவல் கிடைத்தது நான் சட்டமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சராக சட்டமன்ற உறுப்பினராகவும் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன் நான் மட்டுமே இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு 132 சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன் மேலும் 135 மாணவர்களுக்கு சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன் இதேபோல் எனது தொகுதிக்குட்பட்ட துவரிமான் கிராமத்திலும் வாங்கி கொடுத்திருக்கிறேன் 2023 வரை சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள் இடையில் தடைபட்டு இருப்பதாக கூறுகிறார்கள் இந்த காட்டுநாயக்கர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய சமூகம் இவர்கள் படிக்க வருவதே குறைவு அவர்கள் படிப்பதற்கு ஆர்வப்படுத்த வேண்டும் என்னுடைய பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் மனசுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குமோ அந்த வேதனையுடன் இங்கு வந்தேன்
பள்ளிக்கூட பிள்ளைகள் விஷயத்தில் அரசாங்க அதிகாரிகள் விளையாடக்கூடாது இதை எச்சரிக்கையாக கூறுகிறேன் வழக்கமாக எல்லா சமுதாயத்திற்கும் என்ன மாதிரி சான்றிதழ் கொடுக்கிறார்களோ அதே போல் இவர்களுக்கும் கொடுக்க வேண்டும்
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லி இருக்கிறேன் மேல் முறையீடு செய்ய சொல்லுங்கள் பரிசளிக்கிறேன் எனக் கூறியுள்ளார் மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் என்னிடம் கூறும்போது கோட்டாட்சியாரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் என்னிடம் கொடுக்கவில்லை என சொல்லி உள்ளார் ஆகையால் போராட்டக்காரர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க கூடியிருக்கிறேன் என்று சொன்னார்
போராட்டக்காரர்கள் உங்களை சந்தித்து இது குறித்து பேசுவதாக சொல்லி இருக்கிறேன்
முதலமைச்சர் வருவதால் திங்கட்கிழமை வர சொல்லுங்கள் நிச்சயமாக சான்றிதழ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார் கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் இந்த சமுதாயத்திற்கு சான்றிதழ்களை கொடுப்பதற்கு இவர்கள் தாத்தா, அப்பா வழியில் என்ன சான்றிதழ் இருக்கிறதோ அதை வைத்து கொடுக்க வேண்டும் அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடன் பிறந்த சித்தப்பா பெரியப்பா முறையில் பரிசீளித்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறினார்
மேலும் இந்த அரசாங்கமே வேஸ்ட் இவர்கள் எப்படி மக்கள் பிரச்சனையை பார்ப்பார்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் போராட்டக்காரர்களை சந்திக்க வரவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கமே எந்த வேலையும் செய்யவில்லை இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் எவ்வாறு செய்வார் இதை நான் சொன்னால் முன்னாள் அமைச்சர் அரசாங்கத்தை பற்றி விமர்சனம் பண்ணி பேசுகிறார் என்று கூறுவார்கள் இதில் அரசியல் பன்ன விரும்பவில்லை இந்த மக்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கவில்லை என்றால் நானே இவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் இவ்வாறு கூறினார்
இந்த நிகழ்ச்சியில் பரவை முன்னாள் சேர்மன் ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
