• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வீட்டுக் காவலில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்

Byமதி

Nov 19, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

ஹைதர்போரா என்கவுண்டரில் அப்பாவிகள் 2 பேர் பலியானதை கடுமையாக விமர்சித்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இந்த விவகாரம் நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இவரது இந்த கைது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மீண்டும் வீட்டுக்காவலில் உள்ளேன். கட்சியின் மூத்த நிர்வாகிகளான சாகிப், புக்காரி ஆகியோரும் கைதாகி உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.