• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈரோட்டில் தடகள போட்டி தொடக்கம்

Byவிஷா

Nov 7, 2024

ஈரோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் 65வது குடியரசு தின தடகள போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, விளையாட்டு சுடரை ஏற்றி துவக்கி வைத்தார்.
100, 200 மற்றும் 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இன்று தொடங்கி வரும் 11 -ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.