மதுரை காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு. மதுரை திருநகர் காவல் நிலையதில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் புகார். அதனைத் தொடர்ந்து திருநகர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது 296, 196 / 1a, 197/ 1 C, 352, 353/3, 67 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசுபவர்கள் குறித்து, அவதூறாக பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழக முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் மதுரை தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினர் சன்னாசி திருநகர் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து திருநகர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
