சோழவந்தான் கூடை பந்தாட்ட சேர்மனாக பிரபல தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கூடை பந்தாட்ட கழகத்தின் சேர்மனாக பிரபல தொழிலதிபரும், கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எம்.மருது பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூடை பந்தாட்ட அசோசியேசன் முறைப்படி அறிவித்துள்ளது.
சோழவந்தான் கூடை பந்தாட்ட கழகத்தின் தலைவர் சந்தோஷ், செயலாளர் அருண்குமார், பொருளாளர் அபிராமி, நிர்வாகிகள் வணங்காமுடி, பங்காரு ராஜு, ஆனந்தகுமார், மணிகண்டன் தீர்த்தம் ஆகியோரை கொண்ட நிர்வாக குழுவினரால் சோழவந்தானை சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எம்.மருதுபாண்டியனை தேர்வு செய்து தமிழ்நாடு கூடை பந்தாட்ட அசோசியேசனுக்கு அனுப்பி வைத்தனர். இதனை பரிசீலனை செய்த அசோசியேஷன் கூடை பந்தாட்ட போட்டிகளுக்காக மருது பாண்டியன் செய்து வரும் பணிகளை ஆய்வு செய்து, சோழவந்தான் கூடை பந்தாட்ட கழகத்தின் சேர்மனாக டாக்டர் எம் மருதுபாண்டியன் நியமனம் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக நிர்வாகிகள் டாக்டர் மருது பாண்டியனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள மருதுபாண்டியன் கூறும்போது..,
சோழவந்தான் பகுதியில் கூடைப்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட போவதாகவும் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் கூடை பந்தாட்ட போட்டியில் பங்கேற்பதற்கான இளைஞர்களை உருவாக்குவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பதற்காக பள்ளிகளில் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, கூடைப்பந்தாட்ட போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும், விரைவில் சோழவந்தானில் மிகப்பெரிய அளவில் கூடைப்பந்தாட்ட போட்டிகளை நடத்த இருப்பதாகவும் கூறினார். சோழவந்தானின் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதழ்களையும் தெரிவித்தனர்.
