• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திடீரென இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்

Byமதி

Nov 18, 2021

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. நேற்று வரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.