• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை உக்கடம் சம்பவம் : மேலும் 3 பேர் கைது

Byவிஷா

Oct 22, 2024

கடந்த 2022ஆம் ஆண்டு கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அவர்கள் எதிர்நோக்கியது போலவே, கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால், பயங்கரவாதிகள் சதி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய என்ஐஏ அதிகாரிகள், கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபீன் முக்கிய குற்றவாளியாகவும், மேலும், 14 பேரை அடுத்தடுத்த விசாரணைகளில் கைது செய்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியது என்ஐஏ.
நேற்று, இந்த வழக்கு தொடர்பாக கோவையில் மேலும், 3 பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை என்ஐஏ வெளியிட்டுள்ளது.
அதில், “கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட மேலும் 3 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. கைதானவர்கள் இந்த குண்டு வெடிப்பில் நிதியுதவி செய்வதற்கு உதவியாக இருந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது
2022 அக்டோபரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் தூண்டப்பட்டு, கோவையில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது இந்த வழக்கில் நேற்று, அபூ ஹனிபா, சரண் மாரியப்பன் மற்றும் பவாஸ் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 14 குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த ஜமேஷ் முபீன் இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் செயல்பாட்டாளர் ஜமேஷா முபீன் நடத்திய இந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவமானது, இஸ்லாத்தை நம்பாதவர்களுக்கு எதிரான பழிவாங்கும் செயல் என்று என்ஐஏ குற்றம் சாட்டியது. நேற்று கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் பயங்கரவாதச் செயலுக்காக கமிஷன் வழங்குவதற்கு நிதி திரட்ட செயல்பட்டனர் என என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
அபூ ஹனிஃபா கோவை அரபிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஜமேஷா முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். கோயம்புத்தூர் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, ஜமேஷா முபீன், அப்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவராக இருந்த அபு அல் ஹசன் அல் ஹாஷிமி அல் குராஷிக்கு வாக்குறுதி கொடுத்து சத்தியம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.