கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்.

அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற போது வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தன. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற வந்த ஜேசிபி எந்திரமும் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி மண்டலமைந்து இளநிலை உதவியாளர் இளங்கோவன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வணிகர் சங்கங்கள் தற்போது சன்னதி தெரு முன்பாக அமர்ந்து உள்ளதால், தற்போது திருப்பரங்குன்றம் கோயில் வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
