மதுரை பெருங்குடியில் தெற்கு மாவட்ட பாஜக ஒபிசி அணி சார்பில், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடைபெற்றது. பிரதமர் மருத்துவ காப்பீடு அட்டை முகாமில் 243 பொதுமக்கள் பதிவு செய்தனர்.
பிரதமர் மோடியின் பொது சுகாதார திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பயனடையும் வழியில் ரூபாய் 5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
அத ன் கீழ் இந்தியா முழுவதும் 23 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து பயனடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் இதுவரை 30 லட்சம் மக்கள் “பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
மேலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக பாஜகவினர் ஆங்காங்கே இலவசமாக “பிரதமர்மருத்துவ காப்பீடு ” அட்டை பெற சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பெருங்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சோனை தலைமையில் சிறப்பு பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம் நடைபெற்றது.
விழாவிற்கு பாஜகநலத்திட்ட பிரிவு செயலாளர் முத்துக்குமார் ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் அரசு தொடர்பு பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் ராமர், மண்டல் தலைவர் சுந்தர்ராஜன், மண்டல் பொதுச்செயலாளர் பாண்டீஸ்வரி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் முகாமில் 2லந்து கொண்டனர்.
ரூபாய் ஐந்து லட்சத்திற்கான பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற சுமார் 243 பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். பெருங்குடி, பர்மா காலனி , பரம்புபட்டி, சின்ன உடைப்பு, குதிரை குத்தி ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்ட ஓபிசி அணி துணைத் தலைவர் முத்துச்சோனை செய்திருந்தார்.