• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம்…

திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அடந்தனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவர் மகன் ரகுபதி (21) என்பவரும் இவரது உறவினரான நாரமங்கலம் மாரி மகள் ஸ்வேதா(20) இருவரும் கடந்த ஆறு மாத காலமாக காதலித்து வந்ததாகவும் அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இன்று ஸ்வேதா திருமண நிகழ்வுக்கு வந்தவர் ரகுபதி யுடன் பாப்பனேந்தல் பிள்ளையார் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக பாதுகாப்பு கேட்டு திருவாடானை டிஎஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய விசாரணை செய்ய சின்னகீரமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காதல் ஜோடிகள் இருவரும் சட்ட வயதை அடைந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்களை வரவழைத்துள்ளதாகவும் திருமணம் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.