திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள் புறத்தில் ரிலாக்ஸ் என்ற தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை தகவல் கிடைத்தது. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடத்தை அடுத்த அருள் புறத்தில் திருப்பூர் ரிலாக்ஸ் என்ற தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை அதன் அருகே வடமாநில நபரது உடல் ஒன்று தலை சிதைக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து அங்கு சென்ற டிஎஸ்பி சுரேஷ் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதியானது மறுக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்து பிரேதம் எடுத்த பின்னரே செய்தியாளர்களுக்கு போலீசார் செய்தி சேகரிக்க அனுமதி அளித்தனர். மேலும், இந்த சம்பவ இடம் வந்த தடவியல் நிபுணர்கள் ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றனர். மோப்பநாய் அர்ஜுன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியானது தீவிர படுத்தப்பட்டது.

மேலும் கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார் எதற்காக அப்பகுதிக்கு வந்தார் பாரினுள் வைத்து கொலை செய்யப்பட்டு அருகில் இருந்த காட்டுக்குள் போட்டுவிட்டு சென்றனர் அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த தனியார் பாரில் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கும் நிலையில் கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர் இந்த பாரில் உறுப்பினராக இருக்கிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
