மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்காமலும் வர்த்தக நிறுவனங்களின் முன்பு குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக தங்களின் வர்த்தக நிறுவனங்களின் முன்பு உள்ள படிக்கட்டுகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெறும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜவஹர்லால் கூறும் போது..,
ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதற்குப் பிறகு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் மீட்பு பணிகளை உடனடியாக துரிதமாக செயல்படுத்த வேண்டும் என சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மனு அளித்துள்ளோம் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று கூறினார்.
வியாபாரிகள் சங்க த்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் கூறுகையில்..,
கடந்த ஒரு வாரமாக வணிக நிறுவனங்களில் எங்களால் வர்த்தகம் செய்ய முடியவில்லை. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் கூறுகையில்.., கடைகளில் முன்பு கழிவுநீர் கால்வாய் தோன்டிய நிலையில் அப்படியே இருப்பதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கடையில் உள்ள பொருட்கள் கழிவுநீர் கால்வாயில் விழுந்து நஷ்டம் ஏற்படுகிறது. பொதுமக்களும் கடைகளுக்கு வருவது குறைந்து வருகிறது. ஆகையால் போர்க்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கழிவு நீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக கடைகளுக்கு முன்பு தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மனு கொடுக்க வந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செயல் அலுவலரிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக தங்கள் கோரிக்கையை எடுத்துக் கூறியும், பேரூராட்சி செயலாளர். வியாபாரிகளுக்கு எந்த ஒரு சாதகமான பதிலையும் சொல்லவில்லை. இதனால் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்த்து பின்னர் போராட்டம் குறித்து முடிவு செய்வதாக கூறி சென்றனர்.