காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் லயன். டாக்டர்.M. ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ் அவர்களும் கல்லூரியின் சி.இ. ஓ. முனைவர்.S. பிரிட்ஜெட் நிர்மலா அவர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளர், வின் யுவர் வீக்னெஸ் மோட்டிவேஷனல் அகாடமியின் சி.இ.ஓ முனைவர்.I. ஜெகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் கல்வி சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார். இவ்விழாவில் மாணவர்களும் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இவ்விழாவிற்கு மகுடம் சூட்டும் விதமாக முதலாம் ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மாணவி செர்லின் சோபாவின் கல்வி ஆர்வத்தையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களது முழு கல்வி கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்வதாக கல்லூரியின் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் முனைவர்.S. கற்பகம் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா
