இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் துறை சார்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் வீரபாண்டி பகுதியில் தொடங்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை 183, திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் முதல் குமுளி வரை சுமார் 136 கிலோமீட்டர் சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது
இந்த திட்டத்தின் மூலம் இன்று சுமார் 1000 மரக்கன்றுகள் வீரபாண்டி பகுதியில் சாலையோரங்களில் நடவு செய்யப்பட்டது.
சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டத்தை திண்டுக்கல் முதல் தேனி திட்ட தேசிய நெடுஞ் சாலை பொறியாளர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை டெல்லி நீயோ ஃப்ளோரிடெக் நிறுவன மேற்பார்வையாளர்கள் மூலம் கன்றுகள் நடும் திட்ட
பணிகள் நடைபெற்று வருகிறது.

வேப்பமரம், புங்கமரம், நீர்மருது,நாவல் மரம், மஞ்சள் கொன்றை உட்பட 12 வகையான மரக்கன்றுகள் சுமார் 66 , 289 சாலையோரம் மரக்கன்றுகள் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.
