• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத வாலிபர் கொலை???? போலீசார் விசாரணை..!

ByKalamegam Viswanathan

Sep 9, 2024


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடந்தது.

மாலை ஆறு மணி அளவில் கம்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கே வாலிபரின் உடல் கிடந்தது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று இறந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

டவுசர் மற்றும் சட்டை மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லாமல் முகத்தில் மட்டும் காயங்கள் உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் இறந்த நபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மது போதையில் கீழே விழுந்தாரா மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.