• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முன்னாள் பி.எஸ்.எப் வீரர் சிவராமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

ByKalamegam Viswanathan

Sep 7, 2024

மதுரை பாம்பன் நகர் குமரன் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சிவராமன் (42). இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், திலிபன் ரெட்டி, மகேஷ் ரெட்டி,(வயது13), (வயது 8)இரண்டு மகன்கள் உள்ளனர்.

சிவராமன் இந்தியா எல்லை பாதுகாப்பு வீரராக (பி‌.எஸ்.எப்) வீரராக கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

குடி போதைக்கு அடிமையான சிவராமன் வீட்டில் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று குடிபோதையில் இருந்த சிவராமன் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல்துறையினர் சிவராமன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவராமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளான இன்று பாம்பன் நகர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.