• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தாகத்துடன் இருந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்- வைரல் வீடியோ.

ByKalamegam Viswanathan

Sep 4, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்பு உள்ள இந்து சமய அறநிலைத்துறை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

பாம்பை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நான்கு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக அங்கிருந்து மீட்டனர்.

அப்போது பாம்பு மிகவும் சோர்வாக தாகத்துடன் இருப்பதை கண்ட பாம்பு பிடி வீரர் அருகில் உள்ள கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி பாம்புவிற்கு தண்ணீர் கொடுத்தார். தாகத்தில் இருந்த நல்ல பாம்பு தண்ணீர் குடிப்பதை வீடியோவாக எடுத்துள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம்ஒப்படைத்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.