• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவலைப்படாதீங்க பஸ்ல சிரமம் இல்லாம போய் வாங்க…. எம்.எல்.ஏ. ரூபி ஆர். மனோகரன்

ByK.RAJAN

Aug 25, 2024

நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்து கடந்த சில மாதங்களாக சரிவர இயங்காமல் இருந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அதனை அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர். மனோகரன் மேற்கொண்ட முயற்சியினால் புதிய பேருந்து அந்த வழித்தடத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதனை இன்று (25.8.24)நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாங்குநேரியில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின் அவரே பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.

இது ஒரு நாளைக்கு நாங்குநேரி – நெல்லை சந்திப்பு வழித்தடத்தில் ஆறு முறை சென்று வரும். அரசு நகரப் பேருந்து என்பதால் இதில் மகளிருக்கு விலையில்லா பயணச்சீட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் புதிய பேருந்து இயக்கப்பட்டதால் அந்த பேருந்தை முன்பு பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் முன்னாள் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்வி.கிருஷ்ணன், நாங்குநேரி பேரூராட்சி தலைவர் கல்யாணி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் விஎன்கே.அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் சிவனுபாண்டி, நாங்குநேரி நகர திமுக செயலாளர் வானுமாமலை,மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, ஒபேத், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், நாங்குநேரி மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி.பேச்சிமுத்து, கம்யூனிஸ்ட் கட்சி கணேசன், முன்னாள் ஏஐசிசி வசந்தா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்சுந்தர், மாவட்ட இணை செயலாளர் ராமநாதன், மாநில ஓபிசி பொதுச்செயலாளர் வின்சென்ட், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடையார், வி.எஸ்.உடையார், பாலம்மாள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.