சிவகங்கை மாவட்டம் முழுவதும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆலோசனைப்படி கழக உறுப்பினர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சக்கந்தி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ கழக உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றிய கழகச் செயலாளர் செல்வமணி ,மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மணிமுத்து உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
