• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் இளங்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை

ByN.Ravi

Aug 19, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், சர்வே எண் 27ல்3 இடத்தை ஊராட்சி மன்றம் சார்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் அமைந்துள்ள இடத்தை சர்வே செய்து அத்துமால் செய்த பின்னர், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், நில அளவையர் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்ததில் ஆக்கிரமிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. ஆகையால், ஆக்கிரமிப்பில் உள்ள இளங்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.