• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விதைத் திருவிழாவினருக்கு நல்லோர் குழுவினர் நன்றி தெரிவிக்கும் கூட்டம்

ByN.Ravi

Aug 6, 2024

மதுரை குடசெட்தெரு ஸ்ரீ ராமசந்திரா கண்மருத்துவமனையில், நல்லோர் குழுவின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் ஆடி 1.ம் தேதி அன்று நடைபெற்ற விதைத்திருவிழா 5.(ஓ) வில் சிறப்பான முறையில் ஆதரவு தெரிவித்து பெரும் பங்காற்றிமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, நல்லோர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கண் மருத்துவர் ஸ்ரீனிவாசனுக்கு நல்லோர் குழுவின்சார்பில் நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட செஞ்சிலுவை சங்கச்
செயலாளர் ராஜ்குமார் மற்றும் கண் மருத்துவமனையின்மேலாளர் பாபு ஆகியோருக்கு பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். நிகழ்வில், நல்லோர் குழுவின் அறிவழகன், துரை விஜயபாண்டியன், ஜெகதீஸ்வரன், கல்யாணி, ராஜலட்சுமி,சேது லட்சுமி, குரு கிருபா மற்றும் சிறப்பு பள்ளி விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில்,
விதை திருவிழாவிற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தென்மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் அன்னவயல் காளிமுத்து நன்றி தெரிவித்தார்.