சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் சிவகங்கை பள்ளி ஹாக்கி அணி மூன்றாவது இடம். சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார், சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தின் மாநில அளவில் பெண்கள் பிரிவில் பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல் நிலை பள்ளி மாணவிகள் அரை இறுதிக்கு முன்னேறி மூன்றாம் இடத்தை வென்றனர்.
அவர்கள் இன்று ஊர் திரும்பிய நிலையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கோப்பையை வென்று திரும்பிய மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்,

வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து ஊக்குமளித்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதனுக்கு பள்ளியின் முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார்.
