• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்து வரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

Byஜெ.துரை

Jun 26, 2024

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை கந்தன்சாவடியில் அமைந்துள்ள தனியார் மென்பொருள் நிறுவனமான டெமினோஸ் சார்பில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் வறுமையில் விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று டெமினோஸ் நிறுவனம் கணவரை இழந்து ரேபிட்டோ, ஸ்விகி, ZOMATO உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் வாடகை வாகனம் மூலம் வருமானம் ஈட்டிவந்த 10-பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி இருச்சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

அதைபோல் விளையாட்டு துறைகளில் தங்கபதங்களை வென்று சாதிக்கதுடிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கினர்.