• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மெரினா மற்றும் பெசண்ட் நகரில் பார்க்கிங் இலவசம்

Byவிஷா

Jun 8, 2024

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, தனியார் நிறுவனத்திடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளில் பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உட்பட 170 க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5ம், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ம் கட்டணமாக வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டண வசூலை தடுக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகனநிறுத்தம் செயல்படும் பகுதியில் 25மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் சென்னை மெரினா கடற்கரையில் முறையாக செயல்படவில்லை, 4 சக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.300 வரை பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில் சென்னையில் மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.