• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் நாய்க்கு கொரோனா பாதிப்பு

Byமதி

Nov 11, 2021

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 3-ந் தேதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர சுகாதார குழுவின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாய் இப்போது வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளரிடமிருந்து நாய்க்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவது மிகவும் அரிதானது. மேலும் அவை லேசான மருத்துவ அறிகுறிகளை மட்டுமே காண்பிக்கும் மற்றும் சில நாட்களுக்குள் குணமடையும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.