தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெரும்தகை அழைப்பில் பெயரில் சத்தியமூர்த்திபவனுக்கு அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை (சென்னையில்)நேரில் சந்தித்து அவரது வெற்றிக்கு துணை செய்த கூட்டணி கட்சியினரின் பணியையும். குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்களான மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடன் இருந்து கொடுத்த ஒத்துழைப்பு, காலம் நேரம் பார்க்காது செய்த பணியின் அடையாளமாக. கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய சட்டமன்றங்களில் அ திமுக, பாஜக, வெற்றி பெற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எல்லா பகுதிகளிலும் வாக்குகள் அதிகரித்து, கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் விஜய் வசந்த் பெற்றிருப்பதற்கு காரணமாக இருந்த கூட்டணி கட்சியினருக்கும், தமிழகத்தில் 40 சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணியின் வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உன்னதமான உழைப்பிற்கு அவரது நன்றியை முதல்வரின் கைகளை பிடித்து நன்றியை தெரிவித்தார்.