காரியாபட்டியில் நடந்த பள்ளி கட்டிட பூமி பூஜையில் சர்வமதத்தினர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில் அமலா உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் அமலா மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அமலா அன்னை ஆலய பங்குதந்தை ஜான் அமலன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். சிறப்பு பிரார்த்தனை களுடன் பூமி பூஜைகள் செய்யப்பட்டது. அமலா பள்ளி நிர்வாகி அருட்சகோதரிகள் இன்ஸ்பெக்டர செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், தொழிலதிபர் ஜெயசிலன் சுரபி நிறுவன தலைவர் விக்டர், இன்பம் பவுண்டேஷன் நிர்வாகிகள், தமிழரசி, விஜயகுமார். உட்பட பலர் கலந்து கொண்டனர்.
