சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சினியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்தியா முழுவதும் கிளைகளை கொண்ட ஜீ லர்ன் நிறுவன தலைமை செயல் அலுவலகம் மும்பையில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் 2024 போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற அப்பள்ளி மாணவி மனுஶ்ரீ வெள்ளிப்பதக்கம் வென்ற அப்பள்ளி மாணவர் ருத்வின் பிரபு அவர்களது பெற்றோருக்கும் பயிற்சியாளர் குணசீலன், சித்ரா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சிறப்பு பாராட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மும்பை ஜீ லர்ன் தலைமை செயல் அலுவலக அதிகாரி வினயா, பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்களையும், பயிற்சியாளர்களையும் வாழ்த்தி நினைவுப்பரிசுகள் வழங்கினர்.

பாராட்டு கூட்டத்தில் பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது :
சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு எமது மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கல்விக்கட்டண சலுகைகள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சந்திப்பு, அரசு உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆலோசனைகள் என எல்லா வகையிலும் பள்ளி நிர்வாகம் உறுதுணையாக இருக்கின்றது. தற்போது மாணவச் செல்வங்களுக்கு கூடுதல் உதவிகள் கிடைத்திடும் ஏதுவாக மும்பை தலைமை செயல் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் கௌரவித்துள்ளோம் என்றார்.
நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், பள்ளி துணை முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராசன், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



