கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு எழுதிய 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளில் மாற்றம் விரும்புபவர்கள், திருப்தி இல்லாதவர்கள் மீண்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல்களை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த்து மாணவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும் விடைத்தாள் நகல் கோருபவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்றதும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணமும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கே இன்றே கடைசி
