கோவை புரூக்பீல்டு நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.திட்டத்தில் குளங்களை பராமரிக்க செயல்படுத்திய திட்டத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் புரூக் பீல்டு நிர்வாகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள குளங்களை பராமரிக்க புரூக்பீல்டு நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.திட்டத்தில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து,கோவை வெள்ளளூர் சின்னக்குட்டை நீர்த்தேக்கத்தின் மறுசீரமைப்பு செய்து தண்ணிர் நிரப்புதல் திட்டம்வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டுள்ளது..இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு புரூக் பீல்டு மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில்,
கோவை ப்ரூக்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி அஸ்வின் பாலசுப்ரமணியம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
கோயம்புத்தூர் மண்டலம், மதுக்கரை வட்டம் வெள்ளளூர் சின்னக்குட்டை நீர்த்தேக்கத்தின் மறுசீரமைப்பு செய்து தண்ணிர் நிரப்புதல் திட்டம்வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டுள்ளதாகவும், கோவை, சின்னக்குட்டை நீர்த்தேக்கம், 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இது, தற்போது பெய்த மழையால், நிரம்பி யுள்ளது.அப்பகுதி மக்களுக்கு மகழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மறுசீரமைப்புப் பணி, அதாவது தொட்டியை தூர்வாரி, புனரமைத்தல், கோவை குளங்கல் படுகாப்பு அமைப்பு குழுவினரால் மிகவும் நுணுக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புரூக்ஃபீல்ட்ஸ் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் மறுசீரமைப்பு பணிகளை எங்கள் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, குளத்தை .தூர்வாரி, புனரமைக்க கோவை குளங்கல் . கூட்டு சேர்ந்துள்ளோம், இந்தப் பணியை முனைப்புடன்செய்து வருகிறோம் மேலும் தற்போது பெய்துள்ள மழையால் குளம் நிரம்பி உள்ளது. கடும் முயற்சியின் பலனாக,இந்த தட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.. இந்தப் பகுதி மிகவும் வறண்ட பகுதி, விவசாய நிலங்கள் குடியிருப்பு திட்டங்களாக மாற்றப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது அதனால். மறுசீரமைப்பு முயற்சி மூலம்விவசாயம் மீண்டும் செழிக்கும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தில் முன்னேற்றம் காண எதிர்பார்க்கிறோம். பிற வனவிலங்குகள் சுற்றுச்சூழல் அமைப்புக்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு பணிக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் எங்களுக்கு ஊக்கமும் உதவிகளும் செய்து வருகிறார்கள். மேலும் மதுக்கரை வனச்சரக பகுதியில் இதுவரை 15 ஆயிரம் மரங்கள் நட்டியுள்ளோம். மேலும் 5 ஆயிரம் மரங்கள் நட உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, புரூக்பீல்டு நிர்வாகி சுஜாதா உடன் இருந்தார்.














; ?>)
; ?>)
; ?>)