தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை கன்னிகா பரமேஸ்வரி மேல் நிலை பள்ளியில் படிக்கும் பார்வையற்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 80 மாணவ, மாணவிகள் எழுதினர். 69 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்த பொன்னையா – கலைவாணி தம்பதியரின்
மகளான, இரண்டு கண்களிலும் பார்வையிழந்த மாணவி சுகன்யாதேவி 600 க்கு 541 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
‘சுகன்யா பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து வருகிறார். இடையில் ஒரு ஆண்டு மட்டும் மதுரையில் உள்ள கண் தெரியாதவர்கள் பள்ளியில் படித்தார். ஆனால் அவருக்கு அது சரி யாக வரவில்லை. எனவே மீண்டும் இங்கு திரும்பி வந்து படிக் துவங்கினார்.
தற்போது இந்த சாதனையை செய்துள்ளார். அவருக்கு தேர்வு எழுத உதவியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சுகன்யாதேவி கூறுகையில், ‘ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரின் ஊக்கமும், பயிற்சியும் இந்த சாதனைக்கு உதவியது. அடுத்து படிக்க பி.காம் முடிவு செய்துள்ளேன்’ என்றார்.