• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் பசலி மற்றும் திருக்கார்த்திகை உற்சவம்

Byகுமார்

Nov 9, 2021

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சிவபெருமான் பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகும்.

இந்த திருக்கோயிலில் கார்த்திகை மாதம் பசலி – திருக்கார்த்திகை உற்சவம் வருகிற நவ.,14 ஆம் தேதிமுதல் துவங்கி நவ.,23 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை , மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், நவ., 19 ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும்.

மேலும் அன்றைய தினம் மாலை 7.00 மணியளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் சென்று சுவாமி சன்னதி , அம்மன் சன்னதி சித்திரை வீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளி, மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.