• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டத்திற்கு மே 10ல் உள்ளூர் விடுமுறை

Byவிஷா

May 8, 2024

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், மே 10 ஆம் தேதியன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

இந்தாண்டுகான கோடை சீசனை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் 10ஆம் தேதி அன்று மலர் கண்காட்சி தொடங்கி பத்து நாட்கள் என மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தோட்டக்கலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு ரோஜா கண்காட்சியும் நடக்கிறது. இதனால், 10ஆம் தேதியன்று நீலகிரிக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனை ஈடு செய்ய 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.