• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் பெற்ற வீரர்களுக்கு பாராட்டு

ByG.Suresh

May 3, 2024

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் பெற்ற வீரர்களுக்கு வீர தமிழர் வடமாடு பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் ஏப்.27, 28 -ல் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களில், 14 வயது பிரிவில் காஞ்சி லக்சியா, 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் காஞ்சி ரித்தீஷ், தீபன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இதையடுத்து வீர தமிழர் வடமாடு பேரவை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் ஆலோசனைப்படி, சிவகங்கை காமராஜர் காலனியில் வீர தமிழர் வடமாடு பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர்காஞ்சி செல்வம் தலைமையில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கௌரவ தலைவர் கே.தங்கராஜ், மாநில பொதுச் செயலாளர் நாட்டரசன் கோட்டை மாரிமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற வீரர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கி வாழ்த்தினர்.இதில். மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.