இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் வழக்கறிஞர் பா மருது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை நகர துணை செயலாளர்கள் எம்.எப்.சகாயம் கே.பாண்டி மற்றும் ஆட்டோ சங்க நகரச் செயலாளர், பாண்டி நகர்க்குழு உறுப்பினர்கள் உடையார் ஆண்டிச்சாமி அண்ணாமலை சேகர் ராஜாராம் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.





