• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் மே தின கொண்டாட்டம்

ByG.Suresh

May 1, 2024

சிவகங்கையில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய சங்கம் இணைந்து நடத்தும் மே தின தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நமது நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் சிறப்புரையாற்றி, தொழிலாளர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி இலவச மற்றும் நலத்திட்டங்களை வழங்கி வேட்டி சேலையில் வழங்கி. தொழிலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.

அப்போது மே தின தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை வெயில் தாக்கம் அதிகமாய் இருப்பதால் உழைப்பாளர்களுக்கு வெயில் காலம் முழுவதும் பயன்படும் வகையில் குடிநீர் டேங்க் திறந்து வைத்தார் . அவர்களுக்கு குடிநீர் வழங்கி சிறப்பித்தனர். அப்போது உடன் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் ரவி சரவணன் பிரபாகரன் மற்றும் நமது சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், தாஸ், சரவணன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.