• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 27, 2024

நற்றிணைப்பாடல் 365 :

அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
சென்மோ வாழி – தோழி! – பல் நாள் கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
‘சான்றோய் அல்லை’ என்றனம் வரற்கே.

பாடியவர்: கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேரகோவனார் திணை : குறிஞ்சி

பொருள்:

தோழீ! வாழ்வாயாக! பல்நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் நெடுநாள் காறும் மின்னல் முதலாகிய தொகுதியையுடைய மேகம் மழை பெய்யா தொழிந்தாலும் அருவியொலி மாறாது பெருகி வருகின்ற நீர் விளங்கிய பக்கமலைகளையுடைய; ஆகாயத்தின் மீதுயர்ந்த பெரிய மலைநாடனை; நெருங்கி நின்னையடைந்த எம்மை நீ கைவிடுதலானே சால்புடையையல்லை என்று கூறினேமாகி மீண்டு வருதற்கு; அருமையாகிய காவலைச் செய்துடைய அன்னையினது காவல் கடந்து; பெரிய தலைக்கடை வாயிலையும் நீங்கி ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தினை யடைந்து; பகற் பொழுதிலே பலருங் காணுமாறு யாங் கொண்டிருந்த நாணினை விடுத்து அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவனது ஊர்; எவ்விடத்து உளதென்று வாயால் வினவியறிந்து சென்று வருவோமோ? ஒன்று கூறுவாயாக!