• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில், தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம்

ByN.Ravi

Apr 17, 2024

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சி.பி.எம். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், நகரச் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், காங்கிரஸ் வட்டார தலைவர் பழனிவேலு, மதிமுக இளைஞரணி பாலமுருகன், சிபிஐ தொகுதி பொறுப்பாளர் ஜோதி ராமலிங்கம், பார்வர்ட் பிளாக் பாலகிருஷ்ணன், சி. பி. ஐ. ஒன்றிய செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் கந்தவேல், ஆகியோர் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்கள். சி.பி.எம் .பேரூர் செயலாளர் குருசாமி நன்றி தெரிவித்தார்.