• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ByI.Sekar

Apr 17, 2024

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் மற்றும் கம்பம் நடும் விழா நடைபெற்றது.

இதற்காக திருக்கம்பம் முல்லை பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவிலில் அம்மன் முன்பு ஊன்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருக்கம்பத்திற்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். இந்த நிகழ்வில் கோவில் செயலர் மாரிமுத்து, வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், தொழிலதிபர் சக்தி உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.