• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழிகாட்டுதலில் 500- இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்….

Byadmin

Jul 28, 2021

அதிமுக தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழிகாட்டுதலில் 500- இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.

நீட் தேர்வு, கூட்டுறவு கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் , எரிவாயு மானியம் ,பெட்ரோல் , டீசல் விலை மானியம் என பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக – வின் விடியல் அரசை கண்டித்து அதிமுக தலைமை கழகத்தின் அறிவிப்பின் படி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழி காட்டுதலின் படி மேல்புறம் , கிள்ளியூர் , முஞ்சிறை , தக்கலை ,திருவட்டார் ஒன்றியங்களிலும், பத்மநாபுரம், குழித்துறை நகர பகுதிகள் உட்பட 500 இடங்களில் திமுக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.