• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தீவிர பிரச்சாரம்

ByG.Ranjan

Apr 9, 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் திமுகவினர் வார்டுகள் தோறும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டு வருகிறார்கள். அப்போது திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இனியவன், தமிழ் புலிகளின் மாவட்ட துணைச் செயலாளர் முல்லைவேந்தன் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.