• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சாயல்குடி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாயல்குடி பகுதிகளில் தனது பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முதலாவதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருக்கு அனைத்து சமுதாய பெரியோர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதனையடுத்து வி.வி.ஆர்.நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பாஜக கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.இராஜசேகர பாண்டியன், பாஜக வர்த்தக அணி தலைவர் எஸ்.வி.கருப்பசாமி, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சிவஞான குருநாதன், இந்து திராவிட மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இ.எஸ்.கோட்டைச்சாமி, இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் முகவை எஸ்.தங்கம், மாவட்ட துணை அமைப்பாளர் இரா.திருமுருகன், முன்னாள் கவுன்சிலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதனையடுத்து நரிப்பையூர், கன்னிராஜபுரம் பகுதிகளில் ஆப்பநாடு மறவர் சங்க ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர் சுந்தரகணபதி, அதிமுக மீட்புக்குழு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அமமுக ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் நரிப்பையூர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கிராமம்தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.