• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகன பேரணி – கலெக்டர் மா.சௌ.சங்கீதா இஆப

Byகுமார்

Mar 30, 2024

பொதுமக்களிடையே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா இஆப அலுவலர்களுடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.

கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இஆப , மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், காவல்துறையினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இருசக்கர வாகன பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாட்டுதாவணி பேருந்து நிலையம் வழியாக ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியில் நிறைவடைந்தது.