• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:

ByN.Ravi

Mar 29, 2024

மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் வயது 17. இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சக மாணவர் ஒருவரும் காலை கல்லூரிக்கு செல்வதற்காக அச்சம்பத்து வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத மூலமாக விபத்தில் சிக்கினார்கள். விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களையும் 108 அவசர கால உறுதி மூலமாக மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
இந்த நிலையில் சிகிச்சையில், இருந்த மாணவன் ஹரிஹரன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழக்கவே, தகவல் அறிந்த சக மாணவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் குவிந்த சக மாணவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மாணவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் தள்ளுமுள்ளு ஏற்படவே, அதில் முகப்பு கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் விரைந்து வந்து சக மாணவர்களை சமாதானப்படுத்தி இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாலேயே உயிரிழந்ததாக உறவினர்களும், சக மாணவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்தனர் . உரிய முறையில் விசாரணை நடத்தி தவறு இருக்கு பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்து அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் பைபாஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.